இந்த வலையில் தேடவும்

Monday, July 12, 2010

வாய்யா மெர்பி



மெர்பி விதிகள் பற்றிக் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் . (மெர்பி law வெல்லாம் எனக்கு பர்பி சாப்பிடற மாதிரி என்று சொல்லக் கூடாது ஆமாம்)


"எதாவது தவறாகப் போக வாய்ப்பு இருந்தால் அது கண்டிப்பாகத் தவறாகப் போகும்" என்கிறது அது.(if something can go wrong, it will...) அதாவது விஷயங்கள் இப்போது இருப்பதை விட இன்னும் மோசமாகத்தான் போகும் என்கிறது.....


இதனை பிரபஞ்ச அறிவியல் (cosmology) வெப்பவியலின் இரண்டாவது விதி " என்று கூறுகிறது. (second law of Thermodynamics)


அதாவது பிரபஞ்சத்தின் entropy என்று கூறப்படும் 'ஒழுங்கின்மை' அதிகரித்துக் கொண்டே போகிறது என்கிறது. உதாரணமாக , கண்ணாடி டம்ப்ளர் கீழே விழுந்து உடைவது... (உடைந்த துண்டுகள் திரும்பவும் ஒன்று சேர்ந்து டம்ப்ளராக மாறாமல் இருப்பது),சட்டையின் சாயம் வெளுத்துப் போவது, நமக்கெல்லாம் வயசாகி கிழவன், கிழவி ஆவது , எல்லாம் இதில் அடங்கும். "கசங்கி இருக்கும் ஒரு சட்டை இஸ்திரி செய்த பின்னர், ஒழுங்காக இருக்கிறதே? என்று நீங்கள் கேட்டால், அந்த சட்டை அழகாக மாற நாம் கொஞ்சம் ஆற்றலை (மின்சாரம், வெப்பம்) வெளியில் இருந்து கொடுக்க வேண்டி உள்ளது... (எனவே total entropy அதிகமாகி விடுகிறது) ...அதாவது வெளியில் இருந்து எந்த விதமான உதவியும் பெறாத ஒரு மூடிய System- தில் ஒழுங்கின்மை அதிகரித்துக் கொண்டே போகும் என்கிறது இந்த விதி...


இந்த விதியின் அறிவியல் பூர்வமான விளக்கத்தை இன்னொரு பதிவில் பார்க்கலாம். (ஐயோ இன்னொரு பதிவா?) இப்போது Murphy law - வின் நமது தினப்படி அனுபவங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.



> சினிமா தியேட்டரில் மறைக்கிறது என்று சீட் மாறி உட்கார்ந்தால் முன்னை விட உயரமானவர் வந்து உட்கார்ந்து மறைப்பார்.


> உங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டு ஒரு ATM- கு சென்றால் "Sorry temporarily out of service! என்றோ "Unable to dispense cash" என்றோ வரும்.


> ஒரு முக்கியமான ஈமெயில் அனுப்பும் போது உங்கள் கம்ப்யூட்டர் hang ஆகி விடும்...


> நீங்கள் குடை எடுத்துச் சென்றால் 90% மழை வராது. எடுத்துச் செல்லாத போது 90% மழை வரும்...


>காண்டீனில் queue நகரும் போது உங்கள் முறை வந்ததும் மசாலா தோசா தீர்ந்து விடும்...


> லிப்ட் நீங்கள் கீழே இருக்கும் போது மிக உயரமான floor- இலும் மேலே இருக்கும் போது ground floor - இலும் இருக்கும்


>டிக்கெட் புக் செய்யும் போதோவங்கியில் வரிசையில் நகரும் போதோ உங்களுக்கு முன்னால் உள்ள நபர் மிக அதிக நேரம்
எடுத்துக் கொள்வார்.


>நீங்கள் லேட்டாக வந்தால் உங்கள் பஸ் சரியான நேரத்துக்கு கிளம்பி விடும். நீங்கள் அரை மணி முன்னதாகவே வந்தால்
பஸ் மிகக் தாமதமாகக் கிளம்பும்.


> டைம் ஆகி விட்டதே என்று அவசரப் பட்டு , ஆட்டோ அதிக வாடகையானாலும் ஏறி, வேர்க்க விறு விறுக்க வந்து சேர்ந்தால் இன்னும் function தொடங்கியே இருக்காது.


>பஸ்ஸில் நீங்கள் இறங்கப் போடும் ஸ்டாப் பிற்கு முந்தைய ஸ்டாப்பில் சீட் கிடைக்கும்.


>ஒரு வாகனம் நீங்கள் ரோட்டைக் கடந்து விடலாம் என்ற முடிவுடன் இறங்கி நடக்கையில் வேகமாகவும் , போன பின் கடக்கலாம் என்று நிற்கையில் மெதுவாகவும் செல்லும்.


> நீங்கள் மெனக்கெட்டு தயாரித்த குறிப்புகளை பேச்சுப் போட்டியில் உங்களுக்கு முன்னால் பேசுபவர் கூறி விடுவார்.


>நீங்கள் அவசரமாக அழைக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்.


>உங்களுக்குத் தேவை இல்லாத போது இரண்டு மூன்று ஆட்டோக்கள் நெருங்கி வந்து "ஆட்டோ வேணுமா" என்பார்கள்.தேவைப்படும் போது அரை மணி ஆனாலும் ஒரு ஆட்டோ கண்ணில் விழாது.


> டி.வி யில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியைப் பார்க்க ஒரு வாரமாகக் காத்திருந்தால் அந்த நாள் வரும் போது பவர் போய் விடும். இல்லை கேபிளில் கரண்ட் இருக்காது.


>நீங்கள் தனியாகப் பாடும் போது , விரிபோனி வர்ணம் எல்லாம் ஜோராக வரும்.. ஆனால் யார் முன்னாலாவது பாடும் போது மோகனம் கூட வராமல் அபஸ்வரமாகப் போகும்.


> நீங்கள் மிக சீக்கிரமாக ஒரு பஸ் டிக்கெட்டோ Train டிக்கெட்டோ புக் செய்தால் 95% அதை கான்செல் செய்ய வேண்டி வரும்.


இன்றைக்கு இது போதும்


~சமுத்ரா




2 comments:

இளந்தென்றல் said...

>சமுத்ராவோட பழைய இடுகைகள் எல்லாத்தையும் படிச்சிட்டு இந்த இடுகையிலும் useful la எதாவது சொல்லி இருப்பார் என்று ஆவலுடன் வந்து பாத்தா இந்த இடுகைய மட்டும் ஒரே மொக்கையா முடிச்சிருப்பார்...

nice writing. keep it up. :)

cheena (சீனா) said...

அன்பின் சமுத்ர சுகி

ரசித்தேன் - உண்மையான நிகழ்வுகள்

சுஜாதா சொல்வார் - நாம் டாய்லெட்டில் நிற்கும் போது - அடக்க முடியாமல் நிற்கும் போது - முன்னால் இருப்பவன் குடம் குடமாக நீர் பாய்ச்சுவான். பொறுமையினைச் சோதிக்கும் நேரம் அது.

நலலாவே இருக்கு அத்தனையும்
நல்வாழ்த்துகள் சமுத்ர சுகி
நட்புடன் சீனா