இந்த வலையில் தேடவும்

Thursday, August 5, 2010

வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் ....







ஊருக்குப் போன போது சில கவிதைகள் தோன்றின....

கவிதையெல்லாம் ஊருக்குப் போகும் போது தான் தோன்றுமா
என்றால் அது கொஞ்சம் நிஜம் தான்...IT கம்பெனி ஒன்றின் உள்ளே உலகம்
மிக அழகாகத் தான் தெரிகிறது... பாய் பிரண்டுகள் கேர்ள் பிரண்டுகளுடனும்
கேர்ள் பிரண்டுகள் தங்கள் பாய் பிரண்டுகளுடனும் உலகிலேயே
மகிழ்ச்சியான ஜீவன்கள் போல உலாவிக் கொண்டு உள்ளார்கள்....

புத்தர் வெளி உலக அவலங்கள் தெரியாமல் வளர்க்கப் பட்டது
போல இவர்கள் எல்லாம் IT கம்பெனியின் உள்ளே 'ராமன் ஆண்டால்
என்ன விக்ரம் ஆண்டால் எனக்கென்ன' , Onsite போனோமா பணம்
பார்த்தோமா , வாரம் ஒரு முறை PVR சினிமா போனோமா என்ற மனப்பான்மையில்
இருக்கிறார்கள்...

ஆனால் கவிதைகள் மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் அதிகம்
தோன்றுவதில்லை... மகிழ்ச்சியாக எழுதினாலும் அதைப் படிப்பவர்களுக்கு அதனுடன் ஒன்ற முடிவதில்லை... 'வானில் மிதந்தேன், இறகுகள் இன்றிப் பறந்தேன்' என்றெல்லாம் எழுதினால் "எத்தன மில்லி போட்டாய்" என்று கேட்பார்கள்..
அதே சமயம் "கண்ணீரில் நான் படகு ஓட்டுகிறேன்" ,
உன் நினைவுகளையே நூடுல்ஸ் மாதிரி சாப்பிட்டு உயிர் வாழ்கிறேன் என்றெல்லாம் எழுதினால்
"சோ சோ என்னமா எழுதி இருக்கான்,அற்புதம் அற்புதம்" என்பார்கள்...


ஓகே இனி கவிதைகள்...
(இவை கவிதைகள் தான் என்று தயவு செய்து ஒத்துக் கொள்ளவும்)

* என்
கண்கள் என்னவோ
கறுப்பு வெள்ளை தான்..
அவை காட்டுவதோ
ஆயிரம் வண்ணங்கள்


*வேலம்பாளையம் கிராமத்தின்
திரையரங்கின் முன்னால்
சர்டிங் சூட்டிங்
விளம்பரத்தில்
வெளிநாட்டு ஆண்...


* நண்பனிடம் கடன் வாங்கிக் கொண்டு
இடித்துத் தள்ளும் கூட்டத்தை விட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி,
கையேந்தும் கிழவியைக் கடந்து சென்று,
ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும்
அப்பாவை பார்க்கச் செல்கின்ற எனக்கு
நம்புவது கஷ்டமாக உள்ளது
"வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்" என்று
ஞானிகள் சொல்வதை..



~சமுத்ரா


No comments: