இந்த வலையில் தேடவும்

Sunday, September 19, 2010

நன்றி! நீங்கள் போகலாம்! -இண்டர்வியூ

மஹா லக்ஷ்மிக்கு "சஞ்சலா" என்று ஒரு பெயர் உண்டாம்...அதாவது ரொம்ப சஞ்சலமானவள்...எப்படா இந்த ஆளை விட்டு எஸ்கேப் ஆகலாம் என்று காத்துக் கொண்டிருப்பாளாம்...இது போல தான் ஒரு software கம்பெனிக்கு உள்ளே இருப்பவர்களும் இருக்கிறார்கள்....உள்ளே வரும் போதே எப்போது வெளியேறலாம் என்று நினைத்துக் கொண்டு வருகிறார்கள்....நமக்கு இந்த trend ஏனோ பிடிப்பதில்லை....டீமில் இருந்து விட்டுச் செல்பவர்களுக்கு farewell poem எழுதுவதோடு சரி....இந்த நிலையில், போன வாரம் ஒரு கம்பெனியில் இருந்து walk -in என்று அறிவிப்பு வந்தது....சரி போய்த் தான் பார்ப்போமே என்று சென்றேன்....

வரவேற்பில் உட்கார்ந்திருந்த போது, கூட வந்திருந்தவர்கள் விரோதப் பார்வை பார்த்தனர்...ஐ. ஏ.எஸ் பரீட்சைக்கு வந்தது போல சர்வர், ரீ- பூட்டிங் என்றெல்லாம் அலர்ஜியான சில விசயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர்....பக்கத்திலே உட்கார்ந்திருந்த ஒரு ஆளைப் பார்த்து மெல்ல புன்னகைத்தேன்...அந்த ஆசாமி முகத்தை அந்தப் புறம் திருப்பிக் கொண்டு விட்டார்... என்னவோ அவருக்கு வரப் போகும் எட்டு லட்ச ரூபாய் சம்பளத்தை அப்போதே பிடுங்கிக் கொண்டு விடுவேன் என்று நினைத்தாரோ என்னவோ? என் பெயர் அழைக்கப் பட்டதும் உள்ளே சென்றேன்...

(ஏனோ நமக்கு அறிவியலில் நாட்டம் உள்ள அளவு டெக்னாலஜியில் இல்லை....முதல் நாள் இரவு கூட Marcus Chown எழுதிய 'the quantum zoo ' என்ற புத்தகம் தான் படித்துக் கொண்டிருந்தேன்....)

இன்டர்வியூ
செய்பவர் : வணக்கம்
அடியேன் : வணக்கம்...உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.....(எவ்ளோ பொய் சொல்ல வேண்டியிருக்கு?)
இ : உங்களின் திறமைகள் , அனுபவங்கள் பற்றிக் கூறவும்
அ : (கொஞ்ச நேரம் நான் யார் என்பதே மறந்து விட்டது.... அப்புறம் தானே திறமைகள் ,அனுபவங்கள் எல்லாம்... கற்றது கை மண் அளவு என்பதெல்லாம் அப்போது தான் ஞாபகம் வந்தது, எப்படியோ சமாளித்து) நான் ---கம்பனியில்.....bla bla
இ : ஏதாவது 'certification ' செய்துள்ளீர்களா?
அ : இல்லை
இ : E 1 TDM traffic இல் எவ்வளவு time slot இருக்கும்?
அ : (ஐ லைக் இட்! ) மன்னிக்கவும் மறந்து விட்டது......
இ : VLAN எவ்வளவு byte எடுத்துக் கொள்ளும்?
அ :( ஒ அப்படி ஒண்ணு இருக்கா?) இரண்டு என்று நினைக்கிறேன்....
இ : நீங்கள் இன்டர்வ்யூவுக்கு வந்துள்ளீர்கள்....நினைக்கிறேன் ,இருக்கலாம் என்று கூறுவது கொஞ்சம் odd - ஆக இருக்கிறது...
அ : (மனதில்: குவாண்டம் அறிவியலின் படி 'இருக்கலாம்' என்பது தான் சரியான பதில்) மன்னிக்கவும்....
இ :IXIA வின் தற்போதைய version என்ன?
அ : (மனதில்: விகிபீடியாவ்ல பாக்க வேண்டியது தானே?௦ ) மன்னிக்கவும் அதை நான் கவனிக்கவில்லை....
இ : I think you need to brush up and come for an interview ...
அ : (மனதில்) காலேலே brush பண்ணனே....(ஓகே இனி மேல மூணு வேள குளிக்கறேன்..ஆறு வேள பல் வெளக்கறேன்..நீட்டா இருக்கேன்) sure ..actually didnt have time to prepare ...
இ : I 'm thinking how to fit you for the requirement ....
அ : (மனதில்: அப்படின்னா ஆள விட வேண்டியது தானே ... )ஓகே சார்...
இ : சரி உங்கள்இண்டர்வியூ முடிந்தது....நீங்கள் போகலாம்
அ : மிக்க நன்றி... நான் செலக்ட் ஆகி விட்டேனா? (இதெல்லாம் எனக்கே ஓவரா இல்ல?)
இ : பிறகு தெரிவிக்கிறோம்...நீங்கள் போகலாம்....
அ : மீண்டும் நன்றி....

ஓகே இங்கு கொஞ்சம் சீரியஸ் ஆகவும்:
சில கேள்விகள்:
மிகப் பெரிய MNC நிறுவனங்கள் கூட ஏன் தங்கள் இண்டர்வியூக்களை ஐந்தாம் வகுப்பு லெவலுக்கு நடத்துகிறார்கள்...?அதற்குப் பெயர் என்ன? இதற்குப் பெயர் என்ன? அதில் அது எவ்வளவு இருக்கு? இதில் இது எவ்வளவு இருக்கும் என்று? சின்னப் புள்ள தனமா இல்ல? இதை எல்லாம் கம்ப்யூட்டர் இடம் கேட்டால் ஒரு நொடியின் லட்சப் பங்கு நேரத்திலேயே சொல்லி விடுமே? உயிருள்ள மனிதர்களை ஏன் கடுப்பு ஏற்றுகிறீர்கள்?

ஒரு அரை மணி நேரத்தில் ஒருவரை இவர் நமக்குத் தகுதியானவர் தானா என்று எவ்வாறு தீர்மானிக்கிறார்கள்? அவர் மனப்பாடம் செய்து வந்திருக்கும் நம்பர்களை வைத்து அவரை எப்படி எடை போட முடிகிறது?

சாப்ட்வேர் கம்பனிகள் , இது வரை 'ரோபோட்டு' களை உருவாக்குவதிலேயே வெற்றி பெற்றுள்ளன....காசு அதிகம் கொடுத்தால் 'கழிவறை கழுவக் கூட 'ப்ரோக்ராம்' எழுதும் ரோபோட்டுகள்....வெளியே என்ன நடக்கிறது என்று கவலைப் படாமல் AC அறையில் ஊன் உறக்கம் துறந்து கீ போர்டை தட்டிக் கொண்டிருக்கும் ரோபோட்டுகள்....ஒரு மனிதனின் உண்மையான திறமை என்ன என்பதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை போல் தெரிகிறது...இவனை நம் வலையில் எதை வைத்துக் கொண்டு மாட்டி விடலாம் என்பதில் தான் அவர்கள் கவனம்....அதாவது 'திறமைக்கேற்ற வேலை என்பதில்லை....வேலைக்கேற்ற திறமை தான்' இரண்டாவது கொஞ்சம் ஆபத்தானது... ஒரு மனிதனின் ஆதார ஆசைகளை அழித்து விட்டு சோற்றுக்காக அவனை ஒரு இயந்திரத்தின் முன் திணிப்பது....எனக்கு சிறு வயதில் இருந்தே கம்ப்யூட்டர் என்றாலே அலர்ஜி....ஆனால் அரை ஜாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் எது விண்டோஸ் விஸ்டா? :( :( :(


டி. வியில் வரும் விளம்பரம் ஒன்று எனக்கு மிகவும் பிடித்தது,,,,, இண்டர்வியூ ஒன்றின் மத்தியில் candidate கடுப்பாகி , இந்த இண்டர்வியூவின் நோக்கம் எனக்கு என்ன தெரியும் என்று அறியவா? இல்லை என்ன தெரியாது என்று அறியவா? என்று கேட்பார்....

ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் இந்த 'சாப்ட்வேர்' வேலைகள் இந்திய இளைஞர்களை வடி கட்டிய முட்டாள்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன....

~சமுத்ரா

1 comment:

pozhuthupoku said...

unmaiyai eluthi irukkeerergal nanbare... arumai!!!!