இந்த வலையில் தேடவும்

Sunday, January 9, 2011

உருவமில்லா உருண்டை!

துதிப்போர்க்கு வல்வினைபோம்..

துக்க செய்தியை
தாங்கி வரும் அழைப்புகளுக்கு
ம்
மொபைல்கள்
'சஷ்டியை நோக்க' என்று ஒலிக்கின்றன..


உருவமில்லா உருண்டை

எங்கள் வீட்டுக் குழந்தை
வெறும் கையில் சோறு பிசைந்து
உருண்டைகளாக்கி
அப்பாவுக்கு ஒண்ணு
பாட்டிக்கு ஒண்ணு
மாமாவுக்கு ஒண்ணு
என்று ஊட்டியது...
எங்கள் எல்லாருக்கும்
ஒரே சமயத்தில்
தொண்டையில் இருந்து வயிற்றுக்கு ஒரு
உருவமில்லா உருண்டை இறங்கியது!


சந்ததம் மூவாசை !

அழுக்காவதற்கென்றே
துவைக்கப்படுகின்றன துணிகள்!
தூசு சேர்வதற்கே
துடைக்கப்படுகின்றன தரைகள்
மாசுபடுவதற்க்கே
கழுவப்படுகின்றன கைகள்
மூன்று வித
ஆசைகளில்
மீண்டும் சிக்கிக் கொள்ளவே
ஆலயங்களுக்கு செல்கின்றன மனங்கள்!

நின்னே பஜன

இந்த வருடம் கலைமாமணி கிடைக்குமா?
சபாவில் கூட்டமே இல்லையே?
ஏனோ இந்த வருடமும்
மத்தியான ஸ்லாட் தான் கிடைக்கிறது
மைக் சரியாக வேலை செய்யுமா?
புடவைக்கு மேட்சாக எடுத்து வைத்த
நெக்லஸ் மறந்து விட்டதே!
'ராமா, உன்னை அல்லால் ஒரு நினைவே இல்லை'
என்ற பொருள் கொண்ட கீர்த்தனையை
பாடகி ஆரம்பித்தார்...


சமுத்ரா

1 comment:

பா.ராஜாராம் said...

சுவராசியம்!

கவிதைகள், தளம், profile view, & சமுத்ர சுகி! :-)

கலக்குங்க..