இந்த வலையில் தேடவும்

Friday, June 21, 2013

கலைடாஸ்கோப் -92

லைடாஸ்கோப் -92 உங்களை வரவேற்கிறது.


Time takes time

It's okay to go to hell.  Just don't stay there

-Freedom from fear

மேட்டர் உள்ளே.....


#@!%)@%&$#%

'sleep like a baby' என்ற caption உடன் ksrtc இன் multi -axle வோல்வோ செமி ஸ்லீப்பர் பஸ் ஒன்று இருக்கிறது.போன வாரம் அதில் ஊருக்குப் போனேன்.

sleep like a baby does,  குழந்தை தூங்குவது போலத் தூங்குங்கள் என்று தானே இருக்க வேண்டும்? அது என்ன குழந்தை போலத் தூங்குங்கள்? ஒரு பெயர்ச் சொல்லையும் ஒரு வினைச் சொல்லையும் எப்படி ஒப்பிட முடியும்?
சரி...என்னை அடிக்க வருவதற்கு முன் மேட்டரை சொல்கிறேன்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

தூங்கும் போது நான் செருப்பை கழற்றி விடுவேன். காலையில் ஒரு ஐந்து மணி சுமாருக்கு எழுந்து பார்த்தால் ஒரு செருப்பை எங்கேயோ காணோம்.
காந்திபுரம் ஸ்டாப் நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்..அது எப்படி ஒரு செருப்பு, குத்துக் கல் போல வைத்த இடத்திலேயே இருக்கும் போது இன்னொன்று மட்டும் எங்கோ மாயமாய் போக முடியும்?
F =MA போன்ற இயற்பியல் விதிகள் ஒரு செருப்புக்கு மட்டும் எப்படி apply ஆயின? இரண்டையும் பக்கத்து பக்கத்தில் தானே வைத்தேன்? செருப்புகள் எப்போதும் entwined ஆக இருப்பதே இல்லை போலும்!

மற்றவர்களின் கால்களை கவனித்தேன்...எல்லாரின் கால்களிலும் இரண்டு செருப்புகள் அழகாக அமர்ந்திருந்தன. நம்மிடம் ஒரு குறை இருக்கிறது என்றால் அதே குறை மற்றவர்களிடமும் இருக்கிறதா என்று பார்ப்போம்.
நம் சட்டையில் ஒரு பட்டன் இல்லை என்றால் எதிரே வரும் எல்லாருடைய
பட்டன்களையும் கவனிப்போம். நம்முடைய குடையின் கம்பி வெளியே வந்திருந்தால் எதிரே வரும் எல்லாருடைய கம்பியையும் கவனிப்போம்.
நம் பல்வரிசை சரியாக இல்லை என்றால் நம்மிடம் பேசும் எல்லாருடைய பல்லையும் கவனிப்போம்....fact என்ன என்றால் நாம் தான் நம் பட்டன் குடைக்கம்பி பல்வரிசை பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருப்போம். மற்றவர்கள் அதைக் கவனிக்கக் கூட மாட்டார்கள். உதாரணமாக , ஒரு நாள் இரண்டு கால்களிலும் வேறு வேறு செருப்பு போட்டுக் கொண்டு வெளியே போய்ப் பாருங்கள்...95% பேர் அதை கவனிக்க மாட்டார்கள்...:)

என் செருப்பு காணாமல் போகவில்லை என்றால் ஏன் மற்றவர்கள் கால்களை கவனிக்கப் போகிறேன்? நம்மிடம் உள்ள ஒரு குறை, நம் observation skills ஐ எத்தனை அதிகமாக்கி விடுகிறது? நமக்கு சரியாக பேச வராது என்றால் சரளமாகப் பேசும் ஒருவரை கூர்ந்து கவனிப்போம். கறை நல்லது என்பது போல குறையும் நல்லது போலும்! மற்றவர்கள் கால்களில் செருப்புகள் இருந்தன என்று சொல்வதை விட செருப்புகள் அழகாக இருந்தன..டிஸைன் டிசைனாக கலர் கலராக விதம் விதமாக... வாழ்க்கையில் இப்படி செருப்புகளை கூர்ந்து கவனித்தது இதுவே முதல் முறை...முடிந்த மட்டும் கால்களால் துழாவி செருப்பு எங்கேயாவது இருக்கிறதா என்று பார்த்தே ன்...ஹூஹும்...அறிகுறியே காணோம்.

காந்திபுரத்தில் இறங்கவில்லை என்றால் கடைசி ஸ்டாப் மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட். அங்கிருந்து கா. பு. க்கு நூறு ரூபாய் அழ வேண்டும். எனக்கு முன்னால் சீட்டில் அமர்ந்திருந்தவர்கள் சீட்டை நன்றாக பின்னால் பரப்பி விட்டுக் கொண்டு (இன்னும்)சுக நித்திரை செய்து கொண்டிருந்தார்கள் . sleep like a baby ! வந்தது வரட்டும் என்று அப்படியே உட்கார்ந்து விட்டேன். காந்திபுரம் காந்திபுரம் என்று கண்டக்டர் கத்தியதும் பேக்கை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு சீட்டின் அடியிலும் வெ .மா. இத்யாதிகளை தற்காலிகமாக விட்டு விட்டுத்  தேடினேன். எனக்குத் தெரிந்த இயற்பியலின் படி செருப்பு நான் அமர்ந்திருந்த சீட்டுக்கு பின்னால் சென்றிருக்க வாய்ப்பில்லை  என்று நினைத்துக் கொண்டு....

கடைசியில் என்னை இத்தனை அவதிக்குள்ளாக்கிய அந்த செருப்பு மூன்று சீட்டுகள் முன்னால்  தள்ளி ஒரு சீட்டின் அடியில் சென்று நிலை கொண்டிருந்தது. இதற்குள் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் விட்டு பஸ் நகர்ந்து விட்டிருந்தது...நான் அவசரமாக ஸ்வல்ப நிலிசி என்று சொல்லி விட்டு அரக்கப் பறக்க இறங்கினேன்.. கண்டக்டர் 'அது ஏனு நித்தெ ஒடித்தாரப்பா  ஜன ' என்று அலுத்துக் கொண்டார். (என்ன தூக்கம் ஜனங்களுக்கு) நான் பட்டுக் கொண்டிருந்த அவஸ்தை அவருக்கென்ன தெரியும் பாவம்....

இனிமேல் பஸ்ஸில் செல்லும்போது செருப்பை கழற்றக் கூடாது; அப்படியே கழற்றினாலும் சீட்டுடன் கட்டி வைத்து விட வேண்டும் என்று முடிவெ -டுத்துக் கொண்டேன். after all ஒரு சின்ன செருப்பு என்ன பாடு படுத்தி விடுகிறது மனிதனை!

* உங்களால் இரண்டு நிமிடம் ஆபீசில் கம்ப்யூட்டரை நோண்டாமல் 'சும்மா' அமர்ந்திருக்க முடியுமா? 


இந்தத் தளத்துக்கு சென்று பாருங்கள்.  சும்மா இரண்டு நிமிடம் மௌஸை அசைக்காமல் டேபை மாற்றாமல் ஜி-மெயிலை பார்க்காமல் மெசெஞ்செரில் 
அரட்டை அடிக்காமல் அப்படியே அலைகளின் இசையைக் கேட்டபடி 'சும்மா' அமர்ந்திருக்கவும். 'சும்மா' இருப்பது என்பது வடிவேலு சொல்வது போல ரொம்பவே கஷ்டமான விஷயம் தான்.. 

சும்மா தான் இருக்கேன் என்று ஈசியாகக் சொன்னாலும் நாம் எல்லாரும் உண்மையிலேயே 'சும்மா' இருப்பதில்லை. ஏதோ ஒன்று செய்து கொண்டே தான் இருக்கிறோம்.சுண்டு விரல் நகத்தையாவது நோண்டிக் கொண்டி ருக்கிறோம்.  உடல் சும்மா இருந்தாலும் மனம் சும்மா இருப்பதில்லை.   'சொன்னது கேட்டாயே அகப்பேய் சும்மா இருந்துவிடு' என்று புலம்பினாலும் நம் அகப்பேய் சும்மா இருப்பதில்லை. 

கோயம்பத்தூர் ஈஷா யோக மையத்தில் தியான லிங்கத்தின் அருகில் யாரையும் பேச அனுமதிப்பதில்லை. கோயிலுக்குள் நுழையும் போதே 'பேசாதீர்கள்' என்று ஜாடை செய்து பேரமைதியில் நம்மை உள்ளே அனுப்பி வைக்கிறார்கள் வாலண்டியர்கள்.பெண்கள் தங்கள் கொலுசுகளை கழற்றி விட வேண்டும். ஜீன்ஸ் பேண்டுகளை கீழே உரசா வண்ணம் மடித்து விட்டுக் கொள்ள வேண்டும். 

மௌனத்தை கலைக்கும் வண்ணம் அல்லது மௌனத்தை மேலும் ஆழப்படுத்தும் வண்ணம் ஒருவர் உட்கார்ந்து மிருதங்கம் வாசிக்கிறார். முதலில் மிகவும் slow pace இல் ஆரம்பிக்கும் நடை மெல்ல மெல்ல வேகமெடுத்து ஓட ஆரம்பிக்கிறது. பேச்சற்ற மகா மௌனத்தில் அந்த லயம் நமக்குள் புகுந்து ஏதோ செய்கிறது.சுற்றிலும் பேச்சுகளின் சாகரத்தில் இருந்து பழகி விட்ட நமக்கு அந்த ஆழ்ந்த மௌனம் புதிதாகவும் புதிராகவும் இருக்கிறது. உள்ளே தியான லிங்கத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள அரையிருட்டுக் குகைகளில் அமர்ந்து தியானம் செய்யலாம். மணி அடித்ததும் எழுந்து வந்து விடலாம். கர்ப்ப கிரகத்தை விட்டு வெளியே வந்து 
சித்தர்களின் சிலைகள் இருக்கும் மண்டபத்தை விட்டு வெளியேறும் வரை பேச அனுமதி இல்லை. அப்புறம் வெளியே வந்து வழக்கம் போல 
வம்சம் சீரியலில் ரம்யா கிருஷ்ணன் அணிந்த சேலை, கேண்டீனில் பஜ்ஜி இருக்கிறதா, ATM இல் பணம் வரவில்லை கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி போன்ற வேதாந்த தத்துவ விசாரங்களில் ஈடுபடலாம்.

சரி....வாயை பேசாமல் இரு என்று சொல்ல முடியும்.. ஆனால் மனதை?
அது விடாமல் பேசிக் கொண்டு தானே இருக்கிறது? mind is a b--ch ...




*
I hate slow replies என்று எங்கோ படித்தேன். how r u என்று sms அனுப்பினால் அரை மணிநேரம் கழித்து fine என்று reply அனுப்புபவரா நீங்கள்? அதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள். sms என்றால் ஐந்து நிமிடத்துக்குள் email என்றால் அரை மணி நேரத்துக்குள் ஏதாவது  reply அனுப்பி விடுங்கள். sms அனுப்புகிறாயா அனுப்பு..நான் எப்போது சௌகரியமோ அப்போது தான் பதில் அனுப்புவேன் என்று சொல்லாமல் சொல்லாதீர்கள்.

சரி. இது கொஞ்சம் டூ மச்...

:)



டைரி எழுதும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? இன்று 90% மக்களுக்கு அந்தப் பழக்கம் இல்லை என்று நினைக்கிறேன். டைரி என்பது எழுதும்போது மிகவும் சலிப்பாக இருக்கலாம். அதே டைரியை ஒரு இருபது முப்பது வருடம் கழித்து படிக்கும் போது எப்படி இருக்கும்????அப்படியே கடந்த காலத்துக்கு டைம் மெஷினில் பயணித்த effect கிடைக்கும் அல்லவா?

பாட்டி டைரி எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தாள் . "இன்று காலை 
திருப்பூரில் இருந்து பேபி வந்திருந்தாள் . ஒரு டஜன் ரஸ்தாளிப் பழங்கள் வாங்கி வந்தாள் . அவள் வீட்டுக்காரர் பென்ஷன் விஷயமாக வெளியூர்  பேங்குக்கு சென்றதால் பேரனுடன் அவள் மட்டும் வந்திருந்தாள் . வாங்கி பாத் மற்றும் ரசம் சமைத்தேன்..அப்பளம் சுட்டேன்.கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டிருந்து விட்டு ஸ்வாபிமான் நாடகம் பாத்தோம். மது ஸ்கூலில் இருந்து சீக்கிரமாகவே வந்து விட்டான். பரீட்சை சுமாராக எழுதி இருப்பதாக சொன்னான். மாலை பேபி ஊருக்குக் கிளம்பினாள் . ஒரு பாட்டு பாடச் சொன்னேன். சரஸ்வதி மனோஹரியில் 'எந்த வேடுகொந்து ராகவா' பாடினாள் .காவேரி மாமி கொடுத்த ஆரஞ்ச் கலர் ஜாக்கெட் பிட் , தேங்காய் வைத்துக் கொடுத்தேன். பையன் கையில் ஐந்து ரூபாய் கொடுத்தேன்.."

பதினைந்து வருடம் கழித்துப் படிக்கும் போது , பாட்டியின் வாங்கிபாத் ரசம் இவைகளின் வாசம் மெதுவாக வந்து போகும்!

டைரிகள் எத்தனை சுவாரஸ்யமானவை! அதுவும் மற்றவர்களது டைரிகள்!

ராபர்ட் ஷீல்ட் என்ற ஆசாமியின் டைரியை இதுவரை யாரும் முறியடி க்கவில்லை என்கிறார்கள்.அவரது டைரியில்  கிட்டத்தட்ட நான்கு கோடி வார்த்தைகள்! தினமும் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை என்ன செய்தேன் என்று எழுதி இருக்கிறார். உச்சா போனது, சாண்ட்விட்ச் செய்தது, பல்பு மாற்றியது, ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டது எல்லாம்! இப்போது இந்த மெகா டைரியின் ஆறு பக்கங்கள் மட்டுமே பொது மக்களுக்கு திறந்து  விடப்பட்டுள்ளன. ஐம்பது வருடம் கழித்து மற்ற பக்கங்கள் வெளியே வருமாம். நானும் டைரி எழுதுகிறேன் என்று புது டைரி வாங்கிக் கொண்டு எத்தனையோ முறை கிளம்பி இருக்கிறேன். ஒரு வாரம் அதிக பட்சம் பத்து நாள் எழுதி விட்டு பின்னர் 'இதெல்லாம் என்ன வரலாற்றிலா வரப்போகிறது'
நான் இன்று மசாலா தோசை சாப்பிட்டால் என்ன, இட்லி வடை சாப்பிட்டால் என்ன என்று சலித்துக் கொண்டு டைரியை கடாசி விடுவேன்.ராபர்ட் ஷீல்ட் அளவுக்குப் பொறுமை கிடையாது! டைரி எழுதினால் authentic ஆக எழுத வேண்டும் என்றும் நினைக்கிறேன். எனக்கே உரித்தான சில அந்தரங்கங்களை  டைரி மூலம் வெளிப்படுத்தவும் தயக்கம்.

*
நைவென் (NIVEN ) - I LIKE HIM ....அறிவியல் புனைவு எழுத்தாளர் அவர்.

அவர் சில funny விதிகளை எழுதி உள்ளார்.

F × S = k. The product of Freedom and Security is a constant. To gain more freedom of thought and/or action, you must give up some security, and vice versa

- அரசியல் தலைவர்கள் விஷயத்தில் இது எவ்வளவு உண்மை! முதல்வன் படத்தில் அர்ஜுன் முக்காடு போட்டுக் கொண்டு கிராமத்துக்கு செல்வதை நினைவு படுத்திக் கொள்ளவும்.

It is a sin to waste the reader's time

- ஒரு புத்தகத்தைப் படித்து முடித்ததும் சே ,இதில் போய் நேரத்தை வீணடித்து விட்டோமே,வேறு ஏதாவது செய்திருக்கலாம் என்று தோன்றக் கூடாது. ஒரு நல்ல கதை என்பது 95% அதன் கிளைமாக்ஸில் ஒளிந்து கொண்டிருக்கிறது என்கிறார் சுஜாதா. 

Ethics change with technology 

-இது எவ்வளவு உண்மை? 

உதாரணமாக , இந்த இன்டர்நெட் யுகத்தில் கூட புடவை உடுத்த சொல்லறியே பாட்டி என்கிறாள் ஒரு பெண். இண்டெர்னெட்டுக்கும் புடவைக்கும் என்ன சம்பந்தம்? Ethics change with technology!

- To listen to somebody else's diet is one the worlds's dullest subjects.

சில பேர் எப்போதும் தங்கள் டயட்டைப் பற்றிப் பேசுவார்கள்...அது உங்களை எரிச்சல் அடைய வைக்கும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? எரிச்சல் அடைய வைத்தாலும் பரவாயில்லை. உங்களை guilty ஆக feel செய்ய வைத்து விடுவார்கள்.  வீட்டுக்கு வந்தவருக்கு நீங்கள் ஆசையாக பூரி சமைக்கட்டுமா என்றால் பயங்கரமாகப் பதறி 'ஐயோ,, பூரியா..எண்ணெய் அயிட்டம் பக்கம் நான் தலை வைத்துப் படுப்பதே இல்லை' என்பார்கள். அப்பாவியாக அவர்களுக்கு நீங்கள் டீ போட்டுக் கொண்டு போய்க் கொடுத்தால் அய்யோ டீ காபி எல்லாம் நான் தொடுவதே இல்லை என்று விஸ்வாமித்திரர் ரேஞ்சுக்கு பந்தா காட்டுவார்கள். டேய், நீ என்ன சாப்பிட்டா எனக்கு என்னடா என்று கேட்கத் தோன்றும். சரி, மாம்பழமாவது அரிந்து கொடுக்கலாம் என்று கொடுத்தால் மாம்பழம் உடம்புக்கு ஹீடாச்சே என்று உங்களை கதி கலங்க வைப்பார்கள். ஹோட்டலுக்குக் கூட்டிப் போனால் ச்சே ஹோட்டலா இது....இரண்டு தடவை சாப்பிட்டாலே பி.பி எகிறி விடும்.
என்ன எண்ணெய் ! என்று சலித்துக் கொள்வார்கள். மேலும் , நானெல்லாம் டெய்லி லெமன் ஜூசில் தேன் கலந்து குடிப்பேன்; கேரட் ஜூஸ் குடிப்பேன்..கடுக்காய் சாப்பிடுவேன், என்று சுய புராணம் பாடி கடுப்படிப்பார்கள்.

இன்னொருவர் வீட்டில் இருக்கும் போதோ அல்லது இன்னொருவருடன் ஹோட்டலுக்கு செல்லும் போதோ அதிகம் குறை சொல்ல வேண்டாமே ப்ளீஸ்...உங்கள் டயட்டை வீட்டில் கண்டிப்பாக கடை பிடியுங்கள்...ஆனால் ஒரே ஒரு வேளை உங்கள் நண்பரோ உறவினரோ அன்புடன் தரும் அயிட்டங்களை முகத்தில் அறைந்தது போல மறுத்து விடாதீர்கள். ஒரு வேளை சர்க்கரை அதிகமான காபி குடிப்பதால் ஒன்றும் வந்து விடாது. சர்க்கரை அதிகம் என்றாலும் அதை உடனே சொல்லி விடத்தான் வேண்டுமா? 

அன்பு என்பது எத்தகைய விஷத்தையும் முறியடிக்கக் கூடியது என்பதை மறந்து விடாதீர்கள்!


இன்னொரு பொன்மொழி ஞாபகம் வருகிறது 

"Eat healthy; stay fit - die anyway"


samudra's tweets:

(எல்லாமே மொக்கை தான். எனவே பொறுத்தருள்க..)

*வெப்-சைட்டுகளில் forgot password ? ஆப்ஷன்  இல்லாவிட்டால் நம் 
ஞாபக சக்தி எவ்வளவோ  சிறப்பாக இருந்திருக்கும். 

*சில பெர் ஏன் தப்புத்தப்பாக எழுதுகிறார்கள்?

* டீச்சர்: 6:14 am க்கும் 7:51 am க்கும் இடையே எத்தனை நேரம்? 
மாணவன்: 3 நிமிடம்..டீச்சர்: உனக்கு கணக்கு தெரியவில்லை. மா: உங்களுக்கு காலை தூக்கத்தைப் பற்றித் தெரியவில்லை.

* இன்று ரூமை கிளீன் செய்தேன் என்று ஒரு பேச்சிலர் சொன்னால் 
கதவில் இருந்து படுக்கைக்கு நடக்க வழி ஏற்படுத்தினேன் என்று அர்த்தம்.

* சில ஆட்டோ டிரைவர்களுக்கு flight ஓட்டுவதாக எண்ணம்!

* தூங்குபவர்களை எழுப்புவது பாவம் என்றால் T .T .E க்களுக்கு நரகம் நிச்சயம். 

* கலியுகம் என்பது அண்டர்வேரை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் யுகம்.

* காலங்களில் அவள் வசந்தம்; கலைகளிலே அவள் ஓவியம். பானங்களில் அவள் ஜிகிர்தண்டா.பேய்களிலே அவள் காஞ்சனா!

* அதிக பகல் பொழுது கொண்ட ஜூன்-21 வாழ்த்துக்கள்.. இன்னிக்காவது ஏதாவது உருப்படியா செய்யணும்...


ஓஷோ ஜோக்.

திருடன் ஒருவன் பெரிய வசதியான ஒரு வீட்டில் , நள்ளிரவு நேரத்தில் நுழைந்து , யாரும் விழித்திருக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு 
சுதந்திரமாக பொருட்களைத் திருட ஆரம்பித்தான்.

அப்போது கூண்டில் இருந்த கிளி ஒன்று " சாமி உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது..." என்றது.

திருடன் ஒன்றும் பேசாமல் தன் வேலையைத் தொடர்ந்தான்.

கிளி மீண்டும் " சாமி உன்னை கவனித்துக் கொண்டிருக்கிறது" என்றது.

திருடன் ஒன்றும் பேசவில்லை. சில வினாடிகள் கழித்து கிளி மீண்டும் அதையே சொன்னது. 

எரிச்சல் அடைந்த திருடன் " முட்டாள்,,,கிளியே வாயை மூடு...என்ன விதமான கிளி நீ, மதப் பிரசாரம் செய்யும்  கிளியா? உன் பெயர் என்ன?" என்றான்.

"என் பெயர் பூசாரி" என்றது கிளி.

"எந்த மடையன் உனக்கு பூசாரி என்று பெயர் வைத்தான்?"

"ஏன், இந்த வீட்டின் எஜமானர் தான். அவர் தான் தன் வேட்டை நாய்க்கும் சாமி என்று பெயர் வைத்தார்" என்றது.


சமுத்ரா 



12 comments:

அமுதா கிருஷ்ணா said...

sms அனுப்புவது கஷ்டம்.மறு நாள் கூட பதில் அனுப்பி இருக்கிறேன். வரும் sms- களை உடனே பார்ப்பதில்லை.

எங்கே போனாலும் டீ மட்டும் குடிப்பதேயில்லை. எனக்கு டீ குடித்தால் தலை சுத்தும்.எனவே போற வீட்டில் முதலிலேயே சொல்லி விடுவேன். மற்ற படி அட்ஜஸ்ட் செய்து கொள்வேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றுமே அறிந்திலனே...

பொன்மொழி அருமை...

ஜீவன் சுப்பு said...

//நம்மிடம் ஒரு குறை இருக்கிறது என்றால் அதே குறை மற்றவர்களிடமும் இருக்கிறதா என்று பார்ப்போம்.//

நிச்சயமா ...! நம்ம குறை அடுத்தவனுக்கும் இருந்தா எவ்ளோ சந்தோசம் ...! நம்மகிட்ட இருக்குறது குறையாவே தெரியாது ...!

//'சும்மா' இருப்பது என்பது வடிவேலு சொல்வது போல ரொம்பவே கஷ்டமான விஷயம் தான்.. //

FAIL

//கோயம்பத்தூர் ஈஷா யோக மையத்தில்//

காஸ்ட்லியான டூரிங் ஸ்பாட்டு ...!


//அப்படியே கடந்த காலத்துக்கு டைம் மெஷினில் பயணித்த effect கிடைக்கும் அல்லவா?//

நிச்சயமா ...


கலைடாஸ்கோப் சூப்பர் பிரதர்...!

Kavinaya said...

செருப்பில் தத்துவ விசாரம் தொடங்கி, டைரியில் தொடர்ந்து...

//எனக்கே உரித்தான சில அந்தரங்கங்களை டைரி மூலம் வெளிப்படுத்தவும் தயக்கம்.//

ஆமாம், இதற்காகத்தான் நானும் டைரி எழுதுவதைக் கை விட்டேன். கல்லூரி நாட்களில் கொஞ்சம் எழுதியிருக்கிறேன். இப்போது வாசித்தால் கொஞ்சம் சிரிப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும்.

//"Eat healthy; stay fit - die anyway"//

I like this one :)

ஓஷோ ஜோக் ஜூப்பர்.

Enjoy the longest day!

arul said...

osho kathai arumai

sugu said...

நண்பரே, கலைடாஸ்கோப் எழுதியது போதும். அஅஅ பக்கம் தயவு செய்து வாருங்கள்

சமுத்ரா said...

நண்பரே , கலைடாஸ்கோப் 100 முடித்து விட்டு அடுத்தது அ -அ -அ தான்.
நன்றி

sury siva said...

2.28 p.m. from new jersey
oru email anuppi irukken.
how r u ?
eppa pathil varathunnu paarkanum.

subbu thatha.

VENTURER said...

I really enjoyed today`s content and tweets.. the best i felt is
//
* கலியுகம் என்பது அண்டர்வேரை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் யுகம்.
//

(Sorry My translator is not working to type in Thamizh{Tamil})

If possible, i can give you an idea for your 100th Episode. Why people are writing as "Tamil" instead of "Thamizh" to be actually??

சமுத்ரா said...

Thank you Venturer.

your idea for 100th episode is welcome. :):) pls share it.

Vijayan Durai said...

செருப்பில் கதையை ஆரம்பித்து,...

connecting random thoughts with continuity !! Nice சமுத்ரா. ஓஷோ ஜோக்குகள் கடைசியில் போடுகிறீர்களே!, மனத்தை அழி என்று அவர் சொல்லி உள்ளார் ! இப்படி மனம் போன போக்கில் கலைடாஸ்கோப் கலகல வென எண்ண குவியலாக பளபளக்கிறதே !!

சமுத்ரா said...

விஜயன் , கருத்துகளுக்கு நன்றி...

வார்த்தைகளில் இருந்து மௌனத்துக்கு செல்ல காத்திருக்கிறேன்.